ETV Bharat / city

ஆரோவில்லில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி பன்னாட்டு நகரம் அமைக்கக்கூடாது - தேசிய பசுமை தீர்ப்பாயம் - தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஆரோவில்லில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம்
தேசிய பசுமை தீர்ப்பாயம்
author img

By

Published : Apr 29, 2022, 10:38 PM IST

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதியிலும் ஆரோவில் அறக்கட்டளை, சுற்றுச்சூழல் தாக்க அறிவிப்பின்கீழ் எந்தவித அனுமதியும் பெறாமல், பன்னாட்டு நகரம் என்ற பெயரில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக வனப்பகுதியில் ஏராளமான மரங்களை வெட்டியுள்ளது. இதனால் மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும், பன்னாட்டு நகரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மரங்களை வெட்ட ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (ஏப்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரோவில் அறக்கட்டளை வசம் உள்ள 778 ஹெக்டேர் பரப்பில் பன்னாட்டு நகரம் அமைப்பதற்கு முறையான திட்டத்தை தயாரித்து, 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும், அதுவரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல கிரவுன் சாலை அமைக்கும் திட்டத்தை பொறுத்தவரை, தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டுக்குழு, சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, மரங்கள் வெட்டுவதை குறைக்கும் வகையில் சாலையை எப்படி அமைக்கலாம்? எனவும், சாலை அமைக்கும் பகுதியில் நீர்நிலைகள் உள்ளனவா? என்பது குறித்தும் இரண்டு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய தீர்ப்பாயம், குழு அறிக்கை அளிக்கும் வரை எந்த மரங்களையும் வெட்டக் கூடாது எனவும், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் ஆரோவில் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

இதையும் படிங்க: சென்னையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி... வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.