புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் கட்டட வேலை செய்துவருகிறார். இவருக்கும் கூடப்பாக்கம் ரவடி மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு (டிச. 10) ரவியும் அவரது நண்பர்களும் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ரவியை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் ரவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன் கைது!