சென்னை: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சென்னையில் இன்று (நவ. 6) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி மதிப்பீட்டில், நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நினைவிடப்பணிகள் குறித்து கடந்த செப்.17ஆம் தேதி முதலமைச்சர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அரசாணைக்கு பின் ஒப்பந்தப் புள்ளி
மேலும், பொதுப்பணித்துறையினர் தயாரித்த விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் அனுமதி அனுமதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் இரண்டு தினங்களில் அரசாணை வெளியிடப்படும்.

அரசாணை வெளியிட்ட பின் நினைவிடப்பணிகள் தொடர்பாக ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நினைவிடப்பணிகள் விரைவில் தொடங்கும்" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு பரிசளித்த காவலர்கள்; ஒரு நாள் விடுமுறைக்கு நன்றி