ETV Bharat / city

பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் தனிநபர் மீது அபராதம் விதிக்க பரிசீலனை - Waste Management

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் தனிநபர் மீது அபராதம் விதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கழிவு மேலாண்மை கழகம் என்ற புதிய அமைக்க திட்டம்- அமைச்சர் மெய்யநாதன்

author img

By

Published : May 22, 2022, 6:35 AM IST

சென்னை: தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென் மாநிலங்களுக்கான ஆய்வுடன் கூடிய கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபி, தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் துறை சார்ந்த மூத்த உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் மேடையில் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், "திருக்குறள் புத்தகத்தினை கொடுத்த அமைச்சர் மெய்யநாதனுக்கு நன்றி. திருக்குறள் வாழ்வியலுக்கான புத்தகம். இன்று நாளை மற்றும் இல்லாமல் இதனை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே நமது குறிக்கோளை அடைய முடியும். மேலும் காற்றின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்" எனக் கூறினார்.

அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், "இந்தியா முழுவதும் 132 நகரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் காற்றின் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14 வகையான பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது. கரோனா காலத்தில் அதனை நடைமுறை படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

ஆனால் தற்போது பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஆலைகளை கண்டறிந்து மூடப்பட்டுவருகிறது. இதுவரை 174 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் எதில் கலந்தாலும் மாசு ஏற்படுகிறது. நிலம், கடல் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. பல உயிரினங்கள் அதனை தெரியாமல் உட்கொண்டு உயிரிழந்து விடுகின்றன.

இதற்கு மாற்றாக தான் அரசு மீண்டும் மஞ்சப்பை என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 20% மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலம் வெற்றி பெற்றுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதித்து வருகிறோம்.

அதனை அதிக்கப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,121 டன் பிளாஸ்டிக் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு 12 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் கடைகள் போல், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் தனி நபர்களுக்கும் அபராதம் விதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கொடுங்கையூர், பெருங்குடி பகுதியில் குப்பைகளை உயிரிய முறையில் அகழ்ந்தெடுக்கப்படும் பணிகள் நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இவை வரும் இரண்டு ஆண்டிற்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 59 இடங்களில் குப்பைகள் பிரிக்கப்பட்டு உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இ - கழிவுகள் உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்கும் பணியில் தன்னார்வ மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நிறுவனங்கள் சுதிக்கரிக்கப்படாத களிவு நீரினை நீர் நிலைகளில் கலப்பது என்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம். யாரேனும் இதனை செய்து வந்தால் அதனை நிறுத்த வேண்டும்.

தமிழ்நாடு கழிவு மேலாண்மை கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக நோடல் ஆபீசர் தனியாக நியமிக்கப்படுவார்.

மேலும் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் 22 வகையான காற்று மாசு மற்றும் நீர் நிலைகளில் ஏற்படும் மாசுவை தானியங்கி ரிமோட் மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க கூடிய பணியானது மீண்டும் விரைவில் நடைபெற உள்ளது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் அடுத்த கட்டமாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மஞ்சள் பை விநியோகம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற உள்ளன. மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; இசைவு கடிதம் வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.