ETV Bharat / city

படுதோல்வியை பரிசளித்த வாக்காளர்கள் - உள்ளாட்சி தேர்தல் குறித்து கே.எஸ். அழகிரி!

உள்ளாட்சித் தேர்தலில் ம.நீ.ம., நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளுக்கு மக்கள் படுதோல்வியை பரிசளித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

congress tn head ks alagiri, local body elections, உள்ளாட்சி தேர்தல்,  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், கே எஸ் அழகிரி
கே எஸ் அழகிரி
author img

By

Published : Oct 13, 2021, 6:50 PM IST

சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்

கடந்த ஐந்து மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் பரிசளித்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக பயனாளிகளுக்கு முழுமையாக சேருவதற்கு இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அழகிரி, அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை மக்கள் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பா.ஜ.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக நிர்வாகி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.