ETV Bharat / city

காங்கிரஸ் கட்சி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, மொழி திணிப்புக்கு தான் எதிரானது - கே.எஸ்.அழகிரி!

author img

By

Published : Jun 5, 2022, 4:48 PM IST

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் காவிரி நீர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் தொடரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Congress
Congress

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ’சிந்தனை அமர்வு மாநாடு’ நாளை மற்றும் நாளை மறுநாள் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் அந்நாளில் 300 பேர் வீதம் 3 குழுவாக கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் கொள்கையை எப்படி வளர்ப்பது, தேசிய பிரச்னைகள், மாநில பிரச்னைகள் முதலியவற்றைப் பற்றி நேர்மறையான கருத்துகளை எடுத்துரைக்கலாம்.

மேகதாது அணை பிரச்னை மீண்டும் தலைவிரித்து ஆடுகிறது. மேகதாது அணை குறுக்கே அணை கட்டினால், காவிரிக்கு வரும் நீர் தடைபடும். இதனால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும். கர்நாடக மாநில அரசு வரைவுத்திட்டம் அளித்தபோது, மத்திய அரசு தமிழ்நாடு அரசிடம் விவாதித்துதான் முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தமிழ்நாடு அரசிடம் கேட்காமல் ஒப்புதல் அளித்தது.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி, பெயரளவில்தான் அறிக்கை விட்டாரே தவிர, வேற எதுவும் செய்யவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும். மோடி அரசை நம்பக்கூடாது. கர்நாடக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து, இன்னும் 15 நாள்கள் கழித்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் காவிரி நீர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கோவையில் ஜவுளித்தொழிலாளர்கள் கடந்த 10 நாள்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தினால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. மோடி அரசாங்கம் நூல் விற்பனை செய்யக்கூடிய சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அம்பானிக்கும் அதானிக்கு மிகப்பெரிய நூல் நிறுவனம் இருக்கின்றது.

மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு நூல் நிறுவனம் இருக்கின்றது. ஆகவே, அவர்களுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது, நூலின் விலையை இப்போது நிர்ணயித்துக் கொண்டிருப்பவர்கள் கார்ப்பரேட் முதலாளிகள், மோடி அரசு வந்தவுடன் தனியாரும் பஞ்சு வாங்கி, விலையை நிர்ணயிக்க கூடிய நிலைக்கு வந்துவிட்டனர்.

200 ரூபாய்க்கு விற்கப்பட்ட பஞ்சு நிலை தற்போது 450 ரூபாய் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதனால் கோவை மாவட்டம், மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது. இந்நூல் விலை ஏற்றத்தினால் ஆஸ்திரேலியாவில் இருந்து நூல் இறக்குமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அங்கிருந்து எந்தவித கொள்முதலும் செய்யப்படவில்லை. இந்த நிலை நீடித்தால் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் ஜிடிபி குறையும்.

தமிழ்நாடு பாஜக பதிலளிக்குமா?: திமுக அமைச்சர்கள் மீது பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். அம்பானியின் வருமானம் ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு நேர்மையான விளக்கத்தை பாஜகவால் கொடுக்க முடியுமா?. 140 கோடி மக்களில் சமஸ்கிருதம் பேசினால் புரிந்து கொள்பவர்கள் 24 ஆயிரம் பேர்தான்.

ஆனால் அந்த மொழிக்கு அதன் வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் 644 கோடி ரூபாயை மோடி அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆனால் தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு வழங்கி இருக்கக்கூடிய தொகை வெறும் 29 கோடி. இதற்கு தமிழ்நாடு பாஜக பதிலளிக்குமா?.

அமைச்சர்களுக்கு சொந்த மொழி தெரியவில்லை என்றால் விமர்சிக்கலாம். மற்ற மொழி தெரியவில்லை என்பதை எப்படி விமர்சிக்க முடியும். பாஜக இந்திய கலாசாரத்துக்கு புறம்பாக நடந்து கொள்கிறது. பாஜக 8 ஆண்டுகளில் என்ன புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது? தமிழ்நாட்டுக்கு என்ன செய்துள்ளது?. காங்கிரஸ் கட்சி எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல. காங்கிரஸ் கட்சி இந்திக்கு எதிரானப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது. எந்த மொழியையும் கற்பது நல்லதுதான், ஆனால் திணிப்பது தவறு" என்று கூறினார்.

இதையும் படிங்க: உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்விக் கடன் ரத்து குறித்து ஆய்வு - மத்திய அமைச்சர் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.