ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அண்டை நாடுகளை இணைக்க வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி.

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அண்டை நாடுகள் பலவற்றை கொண்டுவர வேண்டும் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
author img

By

Published : Dec 23, 2019, 5:22 PM IST

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக மக்கள் ஆதரவோடு நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கி ஆண்கள், பெண்கள் - மொழி, மாநிலம், மதம், எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்குபெறக்கூடிய ஆர்ப்பாட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அண்டை நாடுகள் பலவற்றையும் கொண்டுவர வேண்டும். தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகளான மியான்மர், பர்மா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட வேண்டும். குறிப்பாக இலங்கையிலிருந்து வந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக 40 ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

மத பாகுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். இதை மத்திய அரசு ஏற்று மாற்றம் கொண்டுவந்தால் பிரச்னைகள் முடிந்துவிடும். தற்போது இயற்றியுள்ள இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. மதத்தாலும் மொழியாலும் மக்களைப் பிரிக்கக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை.

ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்று-வருகிறது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றிருக்கின்றன. ஹரியானாவில் மேலும் கூடுதலான இடங்களைப் பெற்றுள்ளோம். தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக அரசின் மதவாதம் மற்றும் மக்களைப் பிரித்தாளும் போக்கு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால் நாட்டினுடைய மொத்த உற்பத்தி குறைந்துவருகிறது. மேலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் மக்கள் விரக்தியில் பாஜக அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர் என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கின்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன" என்றார்.

மேலும், ஜார்கண்டில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றி மூலம் பாஜக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் எனச் சொன்ன திருநாவுக்கரசர், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்குத் தொடரும் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் ராகுல் காந்தி உறுதியாகப் பிரதமராவார் என்றார் நம்பிக்கையுடன்.

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக மக்கள் ஆதரவோடு நடைப்பெற்று இருக்கிறது.
தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் தொடங்கி ஆண்கள்,பெண்கள், மொழி,மாநிலம்,மதம்,எல்லைகள் ஆகிய எல்லாவற்றையும் கடந்து எல்லாத் தரப்பு மக்களும் பங்குபெற கூடிய ஆர்ப்பாட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

குடியுரிமை திருத்த சட்டத்தில் அண்டை நாடுகள் பலவற்றையும் கொண்டு வர வேண்டும். தற்போது பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது அண்டை நாடுகளான மியான்மர்,பர்மா,நேபாளம், இலங்கை சேர்க்கப்பட வேண்டும்

குறிப்பாக இலங்கையில் இருந்து வந்திருக்கும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக 40 வருடங்களாக இங்கேயே வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

மத பாகுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் இதை மத்திய அரசு ஏற்று மாற்றம் கொண்டு வந்தால் பிரச்சினைகள் முடிந்துவிடும். தற்போது இயற்றியுள்ள இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது

மதத்தாலையும்,மொழிகளாளையும் மக்களைப் பிரிக்க கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை

மாணவர்கள் பெண்களை சைட் அடிப்பதற்காக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு

திரைத் துறையில் பிரபலமாக இருக்கக் கூடியவர்கள் இதுபோன்ற கேவலமான,அநாகரீகமான கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என கூறினார்

ஜார்கண்ட் மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கிறது. அரியானாவில் மேலும் கூடுதலான இடங்களைப் பெற்று உள்ளோம். தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக அரசின் மதவாத போக்காலும், மக்களைப் பிரித்தாளும் போக்காலும், விலைவாசி உயர்வாலும்,வேலையில்லாத் திண்டாட்டங்கள் பெருகுவதாலும், நாட்டினுடைய மொத்த உற்பத்தி குறைந்து வருவதாலும்,நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் மக்கள் விரக்தியில் பாஜக அரசுக்கு எதிராக திரும்பி உள்ளனர் என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கின்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

ஜார்க்கண்டில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றி மூலம் பாஜக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

இந்த வெற்றி காங்கிரஸ்க்கு தொடரும் எதிர்காலத்தில் ராகுல் காந்தி உறுதியாக பிரதமராகுவார் என இவ்வாறு கூறினார் வருவார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.