கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். படப்பிடிப்பு முடிந்து கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் கரோனா காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் இம்மாதம் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இதனை கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் இருவரும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. படத்தை திரையரங்கில் வெளியிடவே தனுஷ் விரும்புவதாகவும், ஆனால் தயாரிப்பாளர் ஓடிடியில் வெளியிடவே ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தை ஒரே நேரத்தில் இரண்டிலுமே வெளியிட முயற்சித்து வருவதாகவும் தெரிகிறது.
ஆனால் இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வெளியாகும் அதே நேரத்தில் ஓடிடியில் வெளியிட நினைத்தனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பின்வாங்கினர்.
எனவே இம்மாதம் படத்தை திரையரங்கில் வெளியிடலாமா அல்லது ரிலீஸை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கலாமா என்று தயாரிப்பாளர் யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கர்ணன் தயாரிப்பாளருக்கு தனுஷ் நன்றி!