ETV Bharat / city

கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் குழப்பம்: சரிபார்க்க பள்ளி கல்வித்துறை அறிவுரை! - சென்னை மாவட்டச் செய்திகள்

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதால் அதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் குழப்பம்

author img

By

Published : Dec 30, 2020, 10:08 PM IST

சென்னை: மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. அதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவர்களின் விவரங்களை தேசிய உதவித் தொகை பக்கத்தில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தனியாக இணையதள முகவரி மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில மாநிலங்களில் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்ட இணைய முகவரி மற்றும் பாஸ்வேர்டை தனியார் இணையதள மையங்களுக்கு வழங்கியுள்ளனர். அதன் மூலம் தனியார் மையங்கள் ஒரே வங்கிக் கணக்கு எண்களை கொடுத்து மாணவர்களை அதிக அளவில் மத்திய அரசின் உதவித்தொகை பக்கத்தில் சேர்த்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை மறுஆய்வு செய்து பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் இன்டர்நெட் மையங்களில் தவறாக அதிக அளவில் மாணவர்களை ஒரே வங்கிக் கணக்கு எண்களை கொடுத்துப் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அதனை சரி செய்து அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு டிஜிட்டல் இந்தியா தங்க விருது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.