சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தேசிய தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை 2022 அடிப்படையில் ‘தமிழ்நாட்டின் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநாட்டை 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்பவன் ஏற்பாடு செய்கிறது. அதில் தேசிய தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் தமிழ்நாடு ஆளுநரும், வேந்தருமான ஆர்.என்.ரவி பாராட்டுவார்.
மேலும் மாநாட்டின் போது, தேசிய தரவரிசையில் சிறந்து விளங்குவதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகள் மற்றும் உத்திகள் குறித்து தமிழ்நாட்டில் இருந்து தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற பல்கலைக்கழகங்கள் , நிறுவனங்கள் விளக்கமளிக்கும்.
இந்த மாநாட்டில் பங்கேற்க, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் செயலாளர், தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிற கல்வியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 3 சீன நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!