இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுதன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்கி வருகிறது.
இக்கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள தலைமையாசிரியர்கள், 9 முதல் 12 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள். தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், கணிணி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, கலை மற்றும் பிற) என அனைத்து ஆசிரியர்களுக்கும் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்காக செயல்பாடுகள் முதலியன உள்ளடக்கப்பட்டு 12 கட்டகங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டகங்கள ஆசிரியர்கள் TNTP இணையதளத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி (Capacity building Training) என்ற தலைப்பின் கீழ் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது EMIS Teacher id மற்றும் Password - மூலமாக TNTP யில் Login செய்து தங்களது. இணையத்தள வாயிலாக இப்பயிற்சியினை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இணையவழி பயிற்சியானது 14.03.2022 அன்று தொடங்கப்படகள்ளது.
ஒவ்வொரு கட்டகமாக TNTP யில் பதிவேற்றம் செய்யப்படும். புதிதாக கட்டகம் பதிவேற்றம் செய்யப்பட்டதும் ஆசிரியர்களுக்கு EMIS மூலமாக தெரியப்படுத்தப்படும். ஆசிரியர்கள் இணையவழி பயிற்சியில் ஒரு கட்டகத்தை தங்கள் வசதிக்கேற்ற வகையில் தவறாமல் ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும். ஒரு ஆசிரியர் அனைத்து கட்டகங்களையும் முடித்த பின்னர் இப்பயிற்சி
மேற்கொண்டதற்கான சான்றிதழை TNTP-யிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு கட்டகத்தில் உள்ள காணொலிகள். உணரவளங்கள் (Texts), பலவிதமான செயல்பாடுகள் என அனைத்தையும் ஆசிரியர் 100% நிறைவு செய்ய வேண்டியது அவசியம். எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள தலைமையாசிரியர்களும் 9 முதல் 12 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இணையவழி பயிற்சியினை மேற்கொள்ளுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விட்டுக்கொடுத்த விசிக - நன்றி தெரிவித்த திமுக எம்.பி.,