ETV Bharat / city

'கட்டாய மருத்துவ சேவை வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும்' - தீர்ப்பு

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த உடன் கட்டாய மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டம் வேலை இல்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும் என சமூக சமத்துவ மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ravindranath
ravindranath
author img

By

Published : Oct 8, 2020, 6:39 PM IST

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த உடன், இரண்டு ஆண்டுகள் கட்டாய மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நடைமுறை திட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாகப் பணியாற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்புக்குரியது. இருப்பினும், மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சனைக்கு சரியான முறையில் தீர்வு காண வேண்டும்.

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவுடன் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே அரசு மருத்துவமனைகளில் பணிகள் வழங்கிட வேண்டும். காலதாமதம் செய்தல் கூடாது. இரண்டாண்டு கால கட்டாயப் பணியை முடித்தவுடன், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்பினால், அவர்களுக்கு சிறப்பு எம்ஆர்பி தேர்வை வைத்து பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். கட்டாயமாக சேவை செய்யும் காலத்தில், ஒரு நிரந்தர மருத்துவருக்கு வழங்கும் அதே ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவத்துவம் படிக்கும் வெளிமாநிலத்தவர், படிப்பு முடிந்ததும் தங்கள் மாநிலங்களுக்கே சென்று விடுகின்றனர். இது தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு பாதிப்பை உருவாக்குகிறது. இதனால், தமிழ்நாடு மருத்துவ இடங்களை, தமிழ்நாடு மருத்துவர்களுக்காக பாதுகாத்திட இத்தகைய கட்டாயச் சேவை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க இந்த கட்டாய மருத்துவச் சேவைத் திட்டம் ஒரு வழி முறையாக பயன்படுத்தப்படுகிறது. இது தற்காலிகத் தீர்வாக இருந்தாலும், நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமான கட்டாய வேலை திட்டம் வேறு மோசமான விளைவுகளை உருவாக்கும். குறிப்பாக வேலை இல்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும்.

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே முதுநிலை மருத்துவப் படிப்பை படித்து முடித்த மருத்துவர்களுக்குக் அரசு வேலை கிடைக்காத சூழல் சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதிய காலிப் பணியிடங்கள் இல்லாததாலும், நோயாளிகளின் தேவைக்கேற்ப, புதிய வேலை வாய்ப்புகளை அரசுகள் உருவாக்காததாலும் மருத்துவர்களிடையே வேலையின்மை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து இத்தகைய கட்டாய சேவையை நடைமுறைப்படுத்தினால், அது புதிய நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்காது. தற்போதுள்ள நிரந்தர வேலை வாய்ப்புகளும் படிப்படியாக குறைந்துவிடும்.

படித்து முடித்த இளம் மருத்துவர்களை தற்காலிகமாக இரண்டாண்டுகளுக்கு மட்டும் கட்டாய வேலையில் தொடர்ந்து ஈடுபடுத்தும் போக்கு ஏற்பட்டுவிடும். அதனால் பொதுமக்களுக்கும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் சேவை கிட்டாமல் போகும் நிலையை உருவாக்கிவிடும்.

கட்டாய மருத்துவ சேவைத் திட்டம் என்பது பணக்காரர்களுக்கு சாதகமாகவும், சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் உள்ளது. இது அநீதியானதாகும்.

மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களை அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கிட உடனடியாக சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

அனைத்து கட்டாய சேவைத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள், மருத்துவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களை பணி அமர்த்திக் கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பேராசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு: அரசு பதிலளிக்க உத்தரவு...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.