இளையராஜா 'ஏ பியூட்டிஃபுல் பிரேக் அப்(A Beautiful breakup)' என்ற ஆங்கிலப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் இளையராஜாவின் 1422ஆவது படமாகும். இப்படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற இப்படம் சிறந்த பின்னணி இசைக்காக விருது பெற்றுள்ளது.
இளையராஜா தனது 30 ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்குகளை இப்படத்திற்கு வழங்கி இருந்தார். இந்நிலையில் இவ்விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற இளையராஜாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி”!