ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் - டிஜிபி அலுவலகத்தில் புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் டிஜிபி அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்
சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்
author img

By

Published : Jun 25, 2022, 4:08 PM IST

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த சில தினங்களாக சி.வி.சண்முகத்திற்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகத்தின் தலையை வெட்டி தோரணமாக தொங்க விடுவோம் என பேசி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என தெரிவித்தார்.

மேலும், இதேபோல 2021ஆம் ஆண்டு சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்த போது, போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும், அதன்பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்

மேலும், சி.வி.சண்முகத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த போலீஸ் பாதுகாப்பை திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கொலை மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண் ஆதாரத்துடன் டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், யார் தூண்டுதலின் பேரில் எதற்காக மிரட்டுகின்றனர் என போலீசார் கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது ரத்தத்தில் கையெழுத்துப் போட்டவன் நான்.. ஈபிஎஸ் தான் தலைமையேற்க வேண்டும் - தமிழ் மகன் உசேன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.