ETV Bharat / city

குழந்தையை மிரட்டியதாக ஐ.ஏ.எஸ் அலுவலர் மீது புகார் - குழந்தையை மிரட்டியதாக ஐஏஎஸ் அலுவலர் மீது புகார்

குழந்தையை மிரட்டியதாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் மீது ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அலுவலரின் மகன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குழந்தையை மிரட்டியதாக ஐ.ஏ.எஸ்  அலுவலர் மீது புகார்

author img

By

Published : Mar 10, 2022, 9:28 AM IST

சென்னை: விருகம்பாக்கத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், மருத்துவருமான பிரபு திலக் என்பவர், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அலுவலர் திலகவதியின் மகன். இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள ஐஏஎஸ்- ஐபிஎஸ் அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபு திலக் அவரது அண்டை வீட்டில் வசித்து வருபவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் விஜயகுமார் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் தனது 12 வயது மகள் லிப்டில் வந்த போது, அதே லிப்டில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலரான விஜயகுமார் கையில் நாயுடன் வந்தார்.

அப்போது திடீரென தனது மகளை பார்த்து அந்த நாய் குரைத்ததால் அலறி அச்சமடைந்ததாகவும், இதனால் நாயை கட்டுப்படுத்துமாறு தனது மகள் கூறியதற்கு, குச்சியால் மிரட்டி லிப்டை விட்டு தனது மகளை விஜயகுமார் துரத்தியதாக தெரிவித்துள்ளார்.

சிசிடிவி ஆதாரங்கள்

இதனால் தனது மகள் மன உளைச்சல் ஏற்பட்டு அழுததாகவும், இது குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் அசோசியேஷனில் புகார் அளித்தததாக தெரிவித்துள்ளார். மேலும் அசோசியேஷனில் தனது மகளுக்கு மன ஆலோசனை தேவை என விஜயகுமார் தெரிவித்ததால், தனது மகள் மேலும் மன உளைச்சல் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகள் மட்டுமின்றி, தாய் திலகவதி உட்பட குடும்பத்தினர் அனைவரையும் விஜயகுமார் தகாத வார்த்தைகளால் பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனி மனித உரிமை பறிபோகும் படி, விதியை மீறி விஜயகுமார் தனது வீட்டை நோக்கி சிசிடிவி கேமராவை பொருத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடியாக விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: 'விஷாலின் கம்பெனியில் பணமோசடி செய்த பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன்' - உயர் நீதிமன்றம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.