ETV Bharat / city

விவசாயிகளுக்கு நிவாரணம்: வங்கிகளில் ரூ. 97.92 கோடி வரவு வைப்பு - compensation amount for farmers

கடந்த ஆண்டு பெய்த பருவமழையில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 97.92 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Jan 21, 2022, 6:09 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாகப் பெய்தது. முதற்கட்டமாக அக்டோபர் 25ஆம் தேதிமுதல் நவம்பர் 4 வரை பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேதம் ஏற்பட்டது.

இரண்டாவது கட்டமாக நவம்பர் 7 முதல் நவம்பர் 11ஆம் தேதிவரை பெய்த மழையால் வட மாவட்டங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டது.

மூன்றாவது கட்டமாக நவம்பர் 17 முதல் டிசம்பர் 11ஆம் தேதிவரை மழை தொடர்ந்து நீடித்ததால் இதர மாவட்டங்களிலும் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. மொத்தமாக 711.60 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பைவிட 59 விழுக்காடு கூடுதலாகும்

அமைச்சர்கள் குழு ஆய்வு

கனமழையினைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழு நவம்பர் 12ஆம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேத நிலவரத்தை ஆய்வுசெய்து விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்தது.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் நவம்பர் 13ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்களையும், நவம்பர் 15ஆம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் பயிர்ச்சேத பாதிப்பு குறித்து நேரில் ஆய்வுசெய்தார்.

இந்நிலையில், நவம்பர் 16ஆம் தேதியன்று பயிர்ச்சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர்கள் குழு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. முதலமைச்சர் டிசம்பர் 16ஆம் தேதியன்று வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு கீழ்க்கண்டவாறு நிவாரண நிதி உதவி வழங்க ஆணையிட்டார்.

நிவாரணத் தொகை விவரம்

அறுவடைக்குத் தயாராக இருந்த கார், குறுவை, சொர்ணவாரி பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்த இடங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கவும், சம்பா பருவத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6038 மதிப்பீட்டில் குறுகிய கால நெல் விதை, நுண்ணூட்ட உரம், யூரியா, டிஏபி (DAP) அடங்கிய இடுபொருள்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சம்பா பருவத்தில் பாதிப்படைந்த இளம் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.6038 என்ற வீதத்தில் நிதியாக அளிக்க முடிவு எடுக்கப்பட்டது.

சேத மதிப்பீடு

கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாகக் கணக்கெடுப்புச் செய்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட கிராம அளவிலான குழு, சேத மதிப்பீட்டின் ஆய்வை தொடங்கியது.

இதனையடுத்து, அக்டோபர் 25ஆம் தேதிமுதல் டிசம்பர் 11ஆம் தேதிவரை தொடர் மழை இருந்ததால் பயிர்ச்சேத மதிப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

டிசம்பர் மாதம் 11ஆம் தேதிக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிர்களின் விவரம் கணக்கெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிர் பாதிப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் சேதமடைந்த நான்கு லட்சத்து 44 ஆயிரத்து 988 ஏக்கர் பரப்பளவிற்குரிய மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 837 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 168 கோடியே 35 லட்சம் ரூபாய் முதலமைச்சரால் விடுவிக்கப்பட்டது.

மாநில அரசு சார்பாக நிதி

பயிர் நிவாரணத் தொகை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜனவரி 6, 2022 அன்று வழங்கப்பட்டது. இந்த நிதித் தொகை மாநில அரசின் சார்பாக வழங்கப்பட்டது ஆகும்.

இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண், வங்கி விவரங்களைச் சரிபார்க்கும் பணி முடிவடைந்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்தது.

பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாகவும், வங்கிகளின் விடுமுறை காரணமாகவும், நிவாரண நிதி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

விரைவில் முழுப் பணி நிறைவடையும்

தற்போதுவரை சேதமடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.97.92 கோடி, இரண்டு லட்சத்து 23 ஆயிரத்து 788 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய விவசாயிகளுக்கு நிவாரண நிதி விடுவிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் இரண்டு நாள்களில் வரவு வைக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீனவர்களுக்கு டீசல் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் - மீனவ சங்கங்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.