இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு மூன்றாவது முறையாக, முடக்கம் மே 17 வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நோய் பெருந்தொற்று பரவல் அபாயத்தில் இருந்து முழுமையாக வெளிவரவில்லை. இந்த நிலையில், மதுபானக் கடைகள் திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் இங்கு தொடர்ந்து நடைபெற்றாலும், நோய் பெருந்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் முடக்கம் நீடிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் கருதலாம். ஆனால் 40 நாள் நாடு முடக்கத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் நிலை குலைந்து போயிருப்பதை அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
உடல் உழைப்பு தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், சாலையோர வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினர் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் குறைந்த பட்ச நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும். கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பது பற்றி எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு சிந்திக்கவே கூடாது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்