சென்னை: இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சென்னையில் வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட 15 நாட்களுக்குள், அருகில் உள்ள காவல் நிலையங்களில், வாடகைதாரர்களின் பெயர், புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கெனவே வசித்து வந்த முகவரி ஆகிய தகவல்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும்.
வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களுக்கு வாடகைக்கு விடும் ஒப்பந்தம் பற்றி, போலீஸாருக்குத் தெரியபடுத்த தேவையில்லை. வாடகைதாரர்களின் தரவுகள் காவல் நிலையங்களில் பாதுகாக்கப்படும்.
விவரங்கள் எங்கு வைக்கப்படும் தெரியுமா?
மேலும் அந்தந்த பகுதி துணை ஆணையர் அலுவலகங்களிலும், ஆணையர் அலுவலகத்தில் உள்ள உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்கள் பதிவு செய்யப்படும்.
வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருந்து வாடகைக்கு வருபவர்கள், கட்டாயம் இந்த தகவல்களை காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவை மீண்டும் அமல்படுத்தும் சங்கர் ஜிவால்
பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின்படி தான், சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது மீண்டும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: ரவுடிகளைக் கைது செய்ய டேர் ஆப்ரேஷன் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்