சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல்துறை அனுமதி உடன் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிலைகளை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. 5 நாள் வழிபாடு முடிந்த விநாயகர் சிலைகள் நேற்று (செப்.04) காவல்துறை அனுமதித்த வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை உள்ளிட்ட கடற்கரையில் கரைக்கப்பட்டன.
இதனிடையே மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி தெருவில் சமத்துவ பிள்ளையார் வைக்கப்பட்டது. இதற்கு பூஜைகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மற்ற மதத்தினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக சென்னை காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இதே போல, சென்னை புழல் மற்றும் ஆர்கே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் சமத்துவப் பிள்ளையார் வழிபாடு நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: விநாயகர் சிலை ஊர்வலம் - கடற்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு