இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா தொற்று பரவல் காரணமாக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை (நீல நிற அட்டை) வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதற்காக, மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் வார்டு வாரியாக விவரங்கள் பெறப்பட்டு, நிதி வழங்கப்பட்டுவருகிறது.
எனவே, சென்னை மாவட்டத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சென்னை மாவட்டத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் வாழும் பகுதிகளுக்கு வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் தங்களது தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை வழங்கி மேற்படி திட்டத்தில் பயனடையலாம். இல்லையெனில், தங்களது பகுதிக்குட்பட்ட மாநகராட்சி அலுவலகங்களை அணுகி பயன்பெற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாரிதாஸுக்கு வாய்ப்பூட்டு போட்ட உயர் நீதிமன்றம்!