நேதாஜியின் 124ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் எஸ்.வி. சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் முக்கியமானவர். அவரது போர்குணம் எல்லோருக்கும் வர வேண்டும்.
பெரியார் குறித்து இல்லாத ஒன்றை கூறியதாக அனைவரும் நடிகர் ரஜினியை குறைகூறுவது அராஜகம். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் சமமான ஒன்று. ஈ.வே.ரா பேசிய காலத்தில் இவ்வளவு தொலைக்காட்சிகள் இல்லை என்பதால், அவரது கருத்துகள் குறித்து இப்போது மறுப்புகள் வரும்போது அது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சுதந்திரமே வேண்டாம் என்று பெரியார் பேசிய வரலாற்றை யாரும் எளிதாக மறைத்துவிட முடியாது’ என்றார்.
மேலும், பாஜக - அதிமுக பிளவு குறித்து அமைச்சர் பாஸ்கரன் பேசியதற்கு பதிலளித்த அவர், அமைச்சரின் கருத்து சுதந்திரத்தைப் பற்றி முதலமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். இரு கட்சிகளிடையே பிளவு ஏற்படாது என்றும் உறுதிபடக் கூறினார்.
இதையும் படிங்க: ‘திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும்’ - ஜெயக்குமார் விமர்சனம்