ETV Bharat / city

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுமுகாம் வாழ் மாணவர்களின் கல்விக்காக டி.வி. வழங்கிய முதலமைச்சர்!

author img

By

Published : Mar 14, 2022, 8:27 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 14) தமிழ்நாட்டிலுள்ள மறுவாழ்வு முகாம்களில் வாழும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் மாணவச் செல்வங்களின் கல்வி பயன்பாட்டிற்காக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் மாணவச் செல்வங்களின், கல்வி இடைநிற்றலைக் கருத்தில் கொண்டு, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மற்றும் பட்டயப் படிப்பு படித்து வரும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.

மெய்நிகர் வகுப்பறை வசதி

அதன்படி, மாநிலத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களைச் சேர்ந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி, கரோனா நோய்த்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டது. அக்குழந்தைகளுக்கு, மெய்நிகர் வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால், தமிழ்நாடு அரசால் கல்வித்தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் நேரடி வகுப்புகளால் பயனடைவதில் மிகுந்த சிரமம் இருந்தது.

அக்குழந்தைகளின் பள்ளிக்கல்வி, பாதிப்படையாமல் இருக்கும் வகையில், பள்ளிக்கல்வி கற்கும் குழந்தைகள், தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சியைப் பார்த்து முழுவதும் பயனடையும் பொருட்டும், பள்ளிகள் திறந்தவுடன் மாலை நேரச்சிறப்பு வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இலவச டிவி

அதற்கு ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மறுவாழ்வு முகாம்களிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 55 இன்ச் அல்லது 43 இன்ச் ஸ்மார்ட் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் நிறுவிடவேண்டும் என்று (Rotary International Association) ரோட்டரி இன்டர்நேஷனல் சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.

இக்கோரிக்கையினை ஏற்று, ரூ.43,60,600 மதிப்பீட்டிலான 109 வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்கியுள்ளது. இத்தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒவ்வொரு மறுவாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு மாலை நேரக் கல்வி மைய அறைகளில் நிறுவப்பட உள்ளது.

இதையும் படிங்க: வன்னியரசு உட்பட விசிகவினர் பலர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.