சென்னை மாநகராட்சியில் 2022 - 2023 ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரி 696.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும். முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வேண்டிய இறுதி நாளான செப்டம்பர் 30ஆம் தேதி மட்டும் 55.30 கோடி வசூலாகி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 4 லட்சம் பேர் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தியுள்ளனர் என்றும், உரிய நேரத்தில் சொத்து வரி செலுத்திய சொத்துரிமையாளர்களுக்கு இதுவரை 1.25 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தி ஐந்து சதவீத ஊக்கத்தொகை பெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் விரைந்து சொத்து வரியை செலுத்த மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. காலக்கெடு கடந்து சொத்துவரி செலுத்துவோருக்கு சொத்து வரியில் இருந்து கூடுதலாக விதிக்கப்படும் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிப்பில் சென்னை மாநகராட்சி விளக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற தனிக்குழு அமைக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு