ETV Bharat / city

காக்னிசன்ட் நிறுவனம் ரூ.23 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு - காக்னிசன்ட் நிறுவனம்

சென்னை: தமிழ்நாட்டில் காக்னிசென்ட் நிறுவன கட்டடத்திற்கு அனுமதி பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Feb 3, 2020, 11:22 PM IST

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிடிஎஸ் எனும் காக்னிசன்ட் நிறுவனம், சென்னையில் அலுவலகக் கட்டடம் கட்ட, இந்திய நிறுவனமான எல் & டியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி, சென்னையில் 27 லட்சம் சதுர அடியில், கட்டடங்கள் கட்டத் தேவையான அனுமதிகள், உரிமங்கள் பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி பெற, சிடிஎஸ் நிறுவனம் தனது இந்தியன் வங்கிக் கணக்கிலிருந்து 23 கோடி ரூபாயை, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல, புனேவில் கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்று பெற, அரசு அதிகாரிகளுக்கு 6 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடுகளை அமெரிக்காவின் பங்குச் சந்தை ஆணையத்தில் ஒப்புக்கொண்டுள்ள சிடிஎஸ் நிறுவனம், அதற்கான அபராதத்தையும் செலுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிர அரசுகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, இது குறித்து மார்ச் 9ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள், சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் 4 அரசு ஊழியர்கள் கைது

Intro:Body:தமிழகத்தில் காக்னிசன்ட் நிறுவன கட்டிடத்துக்கு அனுமதிகள் பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிடிஎஸ் எனும் காக்னிசன்ட் நிறுவனம், சென்னையில் அலுவலக கட்டடம் கட்ட, இந்திய நிறுவனமான எல் & டி- யுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்ததின் படி, சென்னையில் 27 லட்சம் சதுர அடியில் கட்டங்கள் கட்ட தேவையான அனுமதிகள், உரிமங்கள் பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்த கட்டிடங்களுக்கு அனுமதி, சிடிஎஸ் நிறுவனம் தனது இந்தியன் வங்கி கணக்கில் இருந்து 23 கோடி ரூபாயை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

அதேபோல, புனேவில் கட்டடம் கட்ட சுற்றுசூழல் துறையின் தடையில்லா சான்று பெற அரசு அதிகாரிகளுக்கு 6 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முறைகேடுகளை அமெரிக்காவின் பங்கு சந்தை ஆணையத்தில் ஒப்புக்கொண்டுள்ள சிடிஎஸ் நிறுவனம், அதற்கான அபராதத்தையும் செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகள் சம்பந்தபட்டிருப்பதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மார்ச் 9-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, லஞ்ச ஒழிப்புதுறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.