ETV Bharat / city

பருவமழை காலத்தில் விடுமுறையை தவிர்க்கனும் - செல்லூர் ராஜு! - அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வடகிழக்குப் பருவமழை காலத்தில் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Co-Operative Minister hold meeting for Monsoon rain
author img

By

Published : Oct 22, 2019, 6:40 PM IST

வடகிழக்கு பருவமழை மற்றும் பண்டிகை காலத்தில் கூட்டுறவுத்துறையால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது,

  • மழை மற்றும் புயல் காரணங்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகள் மற்றும் கிடங்குகளில் உள்ள பொருட்களை, அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட உயர்வான பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும்.
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்புக் கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்து பாதுகாப்பாகச் சேமித்து வைத்திடவும், அத்தியாவசியப் பொருட்களின் நகர்வு மற்றும் விநியோகத்தை அன்றாடம் கண்காணித்து, அனைத்து கிடங்குகள் மற்றும் நியாயவிலைக் கடைகளிலும் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளதை அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும்.
  • எளிதில், அணுகமுடியாத பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி தேவையான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • மலைப்பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை உருவாகும் முன்னரே தேவையான அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்து வைத்திட வேண்டும்.
  • உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படவேண்டும்.
  • மண்டல பதிவாளர்கள் இதற்கென கட்டுப்பாட்டு அறை மற்றும் பிரத்யேக தொலைபேசி எண் ஒதுக்கீடு செய்து, துணைப்பதிவாளர் நிலையில், ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமித்து தினந்தோறும், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும்.
  • இந்த கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  • தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் உரிய நேரத்தில் பயிர்க்கடன் வழங்கப்படுவதையும், விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, எவ்வித தடையுமின்றி உரங்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் விடுப்பில் செல்வதைத் தவிர்த்து பொதுமக்களுக்குச் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க...#CanadaElection2019 மைனாரிட்டி ஆட்சியை அமைத்த ஜஸ்டின் ட்ரூடோ!

Intro:Body:கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வடகிழக்குப் பருவமழை காலத்தில்
விடுப்பில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் பண்டிகை காலத்தில் கூட்டுறவுத்துறையால் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

மழை மற்றும் புயல் காரணங்களால் பாதிப்புகளுக்கு உள்ளாககூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள் மற்றும் கிடங்குகளில் உள்ள பொருட்களை, அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட உயர்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்து பாதுகாப்பாக சேமித்து வைத்திடவும், அத்தியாவசியப் பொருட்களின் நகர்வு மற்றும்
விநியோகத்தை அன்றாடம் கண்காணித்து, அனைத்து கிடங்குகள் மற்றும் நியாயவிலைக்
கடைகளிலும் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளதை அலுவலர்கள்
உறுதி படுத்திட வேண்டும். எளிதில், அணுகமுடியாத பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி
தேவையான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.

மலைப் பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை உருவாகும் முன்னரே தேவையான அத்தியாவசியப்
பொருட்களை நகர்வு செய்து வைத்திட வேண்டும். உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட
பிற துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படவேண்டும்.
மண்டல இணைப்பதிவாளர்கள் இதற்கென கட்டுப்பாட்டு அறை மற்றும் பிரத்தியோக
தொலைபேசி எண் ஒதுக்கீடு செய்து, துணைப்பதிவாளர் நிலையில், ஒருங்கிணைப்பு அலுவலர்
ஒருவரை நியமித்து தினந்தோறும், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள்
மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறை
தொலைபேசி எண். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும்.

தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் உரிய நேரத்தில் பயிர்கடன்
வழங்கப்படுவதையும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு
இருப்பு வைக்கப்பட்டு, எவ்வித தடையுமின்றி உரங்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வடகிழக்குப் பருவமழை காலத்தில்
விடுப்பில் செல்வதை தவிர்த்து பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச்
செயலாளர் தயானயத் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்
கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.