சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல-யுமான தோனி இன்று (ஜூலை 7) தனது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தோனி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்திருந்தாலும், அவருக்கு தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தோனி தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடப்படுகிறார்.
தமிழ்நாடு மக்கள் மட்டும் தோனிக்கு ரசிகர்கள் இல்லை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் அவருக்கு ரசிகர் தான். முதலமைச்சர் ஸ்டாலின் இயல்பாகவே கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர். இவர் பல போட்டிகளை நேரில் பார்த்து ரசிக்கவும் செய்திருக்கிறார். அவர், தான் ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் தீவிர ரசிகர் என தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட ரசிகர் தோனிக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டரில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி, உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:Video: தல தோனி 41ஆவது பிறந்தநாள் - கேக் வெட்டி கொண்டாட்டம்