ETV Bharat / city

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் நிவாரண உதவி வழங்கல்

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நேரில் நிவாரண உதவி வழங்கல்
author img

By

Published : Nov 30, 2021, 2:59 PM IST

சென்னை: வடகிழக்குப் பருவமழை, வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகிய காரணங்களால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

இதையடுத்து அந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
முதலமைச்சரின் ஆய்வுப் பணிகள்

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது.
அலுவலர்களுக்கு உத்தரவு

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை சென்னை செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முதலமைச்சர், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அத்துடன் மழைநீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செம்மஞ்சேரி குமரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம், கோவிட் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர், ஒக்கியம் மேட்டில் உள்ள காரப்பாக்கம் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
முன்னதாக, நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது, குட்வில் நகர்ப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அக்குடியிருப்புப் பகுதியை பார்வையிட்டார். உடனடியாக அங்கு தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு ஆணையிட்டதன் அடிப்படையில் மின்மோட்டார்களைக் கொண்டு தேங்கியிருந்த மழைநீர் அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அங்கு நீர்வடிய வைக்கப்பட்டது.
பின்னர், இன்று காலை அப்பகுதி மக்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது நிலைமை சீர் செய்யப்பட்டதா எனக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே. வீர ராகவ ராவ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எம். கோவிந்த ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: Mini Bus Service: சிற்றுந்து சேவையைத் தொடங்கிவைத்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.