சென்னை: கரோனா வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடித்தால் கரோனாவை வெல்லலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளர்வுகள் வளர்ச்சிப் பணிகளுக்கே, கட்டுப்பாடுகள் நலமான வாழ்விற்கே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில்,
- அத்தியவாசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும்
- பொதுவெளியில் முகக்கவசத்தை சரியாக அணிய வேண்டும்.
- தனி மனித இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
- மக்கள் கூடும் பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்.
- கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.
- நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!