சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் (வரவு-செலவுத் திட்ட அறிக்கை) வரலாற்றில் முதல்முறையாக இன்று (ஆகஸ்ட் 13) காகிதமில்லா வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் இது முதல் வரவு-செலவு திட்ட அறிக்கை என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்: நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் நிதி நுட்ப நகரம்!