சென்னை: மு.க. ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து, நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்
நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு
குறிப்பாக நீட் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர், வல்லுநர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிந்து, அத்தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை ஸ்டாலின் அமைத்தார். இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தும்,
இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையைக் கருத்தில்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆளுநரை நேரில் சென்று வலியுறுத்தி உள்ளார் ஸ்டாலின்.
இச்சந்திப்பின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கடைசி 5 மாதங்களில் ரூ. 56,000 கோடிக்கு முதலீடு, 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு