சென்னை மாநகராட்சியின் பரப்பளவு நாளடைவில் பெரிதாகி கொண்டே செல்கிறது. குற்றச் சம்பவங்களை கருத்தில் கொண்டு ஆவடி, தாம்பரத்தை மையமாக கொண்டு புதிய ஆணையரகங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக டிஜிபியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (செப்.23) ஆலோசனை மேற்கொண்டார். அதில், புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாகவும், புதிய அலுவலர்களை பணி நியமனம் செய்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஆலோசனை கூட்டம்