சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து கொண்டே வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வணிக நிறுவனம், ஹோட்டல்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனினும், தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் (ஜனவரி 8) தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது, டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைப்பது, பண்டிகை காலத்தில் கடை வீதிகளில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: காவல்துறை அலுவலர்கள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு