ETV Bharat / city

கொளத்தூர் பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு - கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு

author img

By

Published : Dec 10, 2021, 8:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று (டிச.10) கொளத்தூரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஜெயலட்சுமி, கீதா, மோகனா ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

சிவ இளங்கோ சாலையிலுள்ள வண்ணான்குட்டை பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

இறுதியாக கொளத்தூர், வெங்கடேஸ்வரா நகரிலுள்ள ஸ்கை மஹால், லஷ்மணன் நகர் அக்பர் சதுக்கம், ஜெயராம் நகர் முதலாவது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதனிடையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலமைச்சரிடம் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.