சென்னை: கொளத்தூர் பகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அங்கு கரோனா தடுப்பூசிப் போடும் பணியையும், கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்திகளையும் (Covid Special Ambulance) பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ. 4 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அளித்தது. அதையடுத்து, நிவாரண நிதியின் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாயை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.
-
கொளத்தூர் தொகுதியில் #COVIDVaccination பணியை இன்று ஆய்வு செய்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
தமிழகத்தில் இதுவரை 69 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகளவில் கொள்முதல் தொடர இருக்கிறது.
தடுப்பூசியே #COVID19 தொற்றை வெல்லும் பேராயுதம். அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.#KolathurVisit pic.twitter.com/855KCqEpbv
">கொளத்தூர் தொகுதியில் #COVIDVaccination பணியை இன்று ஆய்வு செய்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 17, 2021
தமிழகத்தில் இதுவரை 69 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகளவில் கொள்முதல் தொடர இருக்கிறது.
தடுப்பூசியே #COVID19 தொற்றை வெல்லும் பேராயுதம். அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.#KolathurVisit pic.twitter.com/855KCqEpbvகொளத்தூர் தொகுதியில் #COVIDVaccination பணியை இன்று ஆய்வு செய்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 17, 2021
தமிழகத்தில் இதுவரை 69 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகளவில் கொள்முதல் தொடர இருக்கிறது.
தடுப்பூசியே #COVID19 தொற்றை வெல்லும் பேராயுதம். அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.#KolathurVisit pic.twitter.com/855KCqEpbv
அந்த வகையில், கொளத்தூரில் உள்ள அமுதம் நியாய விலைக்கடையில், நிவாரண தொகை இரண்டாயிரம் ரூபாயை பயனாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்
இந்த நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐ.பரந்தாமன், தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.