சென்னை: மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிறுத்தம் 55 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. இதில் 57 பேருந்துகள் நிற்கும் வகையிலும், 450 கடைகள் இயங்கும் வகையிலும் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளத்தின் கீழே இரண்டு அடுக்குகளில் 5000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வேய்ந்தாங்குளத்தில் 13 கோடியே எட்டு லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூரில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் 15 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவிலும், திருச்சி மாவட்டம் உய்யங்கொண்டான் ஆற்றின் முகப்பு மறுசீரமைக்கப்பட்டு 18 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இவற்றையும் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, பொதுப்பணித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மீன் விற்கும் தாய்க்கு நடந்த அவமரியாதை: ஸ்டாலின் கண்டனம்