ETV Bharat / city

குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய உயர் வருவாய் குடியிருப்பில் வீடு... - Chennai Head Office

குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உயர் வருவாய் குடியிருப்பில் வீடு ஒதுக்கி அதற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 27, 2022, 1:29 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கும் ஆணையினை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

குமரிமங்கலத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதியின் மகன் குமரி அனந்தன். இவர், பெருந்தலைவர் காமராசர் கால காங்கிரஸில் மேனாள் மாநிலத் தலைவராகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பதவி வகித்தார்.

ஓய்வறியாத தொண்டராக, மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டதோடு, இலக்கியச் செல்வராகவும், மேடை மன்னராகவும், இலக்கியக் கடலாகவும், பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிர்ந்தவர் குமரி அனந்தன்.

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில், அவரது கோரிக்கையை ஏற்று அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி அனந்தனிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் - பேருந்து மீது கல்வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.