ETV Bharat / city

பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு புகார்கள்; முதலமைச்சர் இன்று ஆலோசனை - பொங்கள் பரிசு குறித்து ஸ்டாலின் ஆலோசனை

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல்வேறு புகார்கள் எழுந்தது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
author img

By

Published : Jan 21, 2022, 7:09 AM IST

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை வழங்கியது. இந்த பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்கள் இடம்பெற்றதாக புகார்கள் பல்வேறு புகார்கள் எழுந்தன.

புகார்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜன.21) ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மொத்தமாக 1,297 கோடி மதிப்பில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஜனவரி 10ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில், பல்லி இருந்ததாக முதியவர் ஒருவர் ஊழியரிடம் குற்றஞ்சாட்டினார்.

இதனால் அவர் மீது தவறான தகவலை பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தாக கூறப்பட்டநிலையில், மன உளைச்சலில் இருந்த முதியவரின் மகன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பில் பல்லி.. புகார் தெரிவித்தவர் மீது வழக்கு.. மனவருத்தத்தில் மகன் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.