ETV Bharat / city

’தற்போதைய நல்ல பெயரை பயன்படுத்தி 100% வெற்றிபெற வேண்டும்’ - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை - திமுக மாவட்டச் செயலாளர்கள்

இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ”மக்களிடையே நமக்கிருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி பெற வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

STALIN
STALIN
author img

By

Published : Aug 8, 2021, 1:15 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.08) நடைபெற்றது.

ஏற்கனவே 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இதையொட்டி, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் பொருளாளருமான டி.ஆர்.பாலு, அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு உள்ளிட்ட மாநில தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும், ” மக்களிடம் நமக்கு இருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் 100 விழுக்காடு வெற்றியை பெற்றிட வேண்டும்” என அவர் அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தில் கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்தும் பேசப்பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.