திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், "தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்.
திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.