ETV Bharat / city

'பிரசவத்திற்கு மட்டுமல்ல கரோனா நோயாளிகளுக்கும் இலவசம்' - ஆட்டோக்காரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு - CM MK Stalin Tweet

சென்னை: கரோனா காலத்தில் தன்னார்வலர்களாக செயல்படும் மதுரை ஆட்டோ ஓட்டுநர்களைப் பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்களை பாராட்டி ஸ்டாலின் எழுதிய கடிதம்

author img

By

Published : May 13, 2021, 11:12 PM IST

'பிரசவத்திற்கு மட்டுமல்ல கரோனா நோயாளிகளுக்கும் ஆட்டோ இலவசம்' என்று கூறி சில ஆட்டோ ஓட்டுநர்கள் கரோனா தடுப்பு பணியில் தங்களை தன்னார்வலார்களாக இணைத்துக் கொண்டு திறம்பட பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குருராஜ் கரோனா முதல் அலை தாக்கத்தின் போதிருந்தே மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் தனது சேவையைத் தொடங்கினார்.

இவருடன் இவரது நண்பர் அன்புநாதனும் இணைந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் தன்னார்வலர் அடையாள அட்டையோடு பயணிக்கும் இருவரும், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குவது, நோய்த்தாக்கம் உள்ள பகுதிகளுக்குச் சென்று காய்கறிகள் வழங்குதல், நியாயவிலைக்கடை பொருள்கள் வழங்குதல் என பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

ஆட்டோ ஓட்டுநர்களை பாராட்டி ஸ்டாலின் எழுதிய கடிதம்
ஆட்டோ ஓட்டுநர்களைப் பாராட்டி ஸ்டாலின் எழுதிய கடிதம்

அதுமட்டமின்றி ஊரடங்கு நேரத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நபர்களுக்கும், போக்குவரத்து வசதி இல்லாமல் பேருந்து நிறுத்தம், ரயில் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளை அழைத்துச் செல்வதற்கும் தங்களது ஆட்டோவை இலவசமாக வழங்குகின்றனர். இந்நிலையில், இவர்களது சேவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் இளைஞர்கள் குருராஜும் அவரது நண்பர் அன்புநாதனும் கரோனா தொற்றுக்காலத்தில் அரசின் அனுமதிபெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாகப் பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்.

இப்பெரும் போரில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதிமுக்கியமானது. நாம் இணைந்து விரைவில் கரோனாவை வெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.