சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று (பிப்.2) சுமார் 50 நிமிடங்கள் பேசிய ராகுல் காந்தி, ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, "நீட் தேர்வை விலக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால் தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் நீட் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறது. உங்களுடைய வாழ்நாளில் தமிழ்நாட்டு மக்களை ஒரு நாளும் ஆளவே முடியாது” என்றார். இந்த உரைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கும்படி ட்வீர் செய்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள ராகுல் காந்தி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார, அரசியல் தமிழர்களின் நீண்ட கால வாதங்களை நாடாளுமன்றத்தில நீங்கள் பேசியிருக்கிறீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாக்., சீன விவகாரம்: ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் பதிலடி!