சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கனாரின் 114ஆவது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் நேரில் மலர் அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். அவருடன் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கானர் குருபூஜை விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செய்யப்படுகிறது.
முதன் முறையாக ஸ்டாலின்
இந்நிலையில், மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக முதன் முறையாக நேரில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
![முதலமைச்சர் ஸ்டாலின், cm stalin, mk stalin, muthuramalinga devar kamuthi, goripalayam statue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13412979_sta.jpg)
முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கனார் சிலைக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார். பிரச்சினைகள் ஏற்படாவண்ணம் 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்!