ETV Bharat / city

மனிதநேயம் பற்றி பேசிய சிறுவன் அப்துல் கலாமுக்கு வீடு... முதலமைச்சர் அதிரடி...

மனிதநேயம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் அப்துல் கலாமுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

cm-mk-stalin-order-to-house-allotment-for-student-abdul-kalam

author img

By

Published : Feb 25, 2022, 5:58 PM IST

வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்னும் சிறுவன் யூட்யூப் தொலைக்காட்சியில் யாரையும் வெறுக்க கூடாது அன்பு செலுத்தவேண்டும் என்று மனித நேயம் குறித்து பேசினான். இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்று, சிறுவனுக்கு பாரட்டுக்கள் குவிந்தன. இதையடுத்து சிறுவனையும் அவனது பெற்றோரையும் தொலைகாட்சிகள் வரிசையாக அழைத்து பேட்டியெடுத்தன.

இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன். சாதி, மத பாகுபாடுகளைக கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவனுடை பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர்" என்று பதிவிட்டார்.

  • இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி

    1/4 pic.twitter.com/fyYvwnhjlT

    — Tha Mo Anbarasan (@thamoanbarasan) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த நேரத்தில் சிறுவனின் பெற்றோர், தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி கூறியதாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முதலமைச்சர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறுவனின் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அமைச்சர் தாமோ. அன்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறுவன் அப்தூல் கலாமுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவின் பேரில், இன்று எந்த பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று சிறுவனின் பெற்றோரிடம் கேட்டறிந்தேன். நாளைக்குள் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணை வழங்கப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மனிதநேயம் பற்றி பேசிய சிறுவன், பெரியார் நாடகத்தில் நடித்த சிறுவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.