ETV Bharat / city

கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் - கால்நடை பராமரிப்பு ஆம்புலன்ஸ்

சென்னை: கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நவீன வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ள அம்மா ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Nov 5, 2019, 12:12 PM IST

கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் அம்மா ஆம்புலன்ஸ் சேவை இன்று முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் சண்முகம், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கம், படுக்கை வசதி, சிகிச்சைக் கருவிகள், அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவக் குழுவும் இடம்பெற்றுள்ளது.

கால்நடைகளுக்கு அவசர, உயிர் காக்கும் சிகிச்சைக்காக 1962 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்புகொண்டால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸை தொடங்கிவைக்கும் முதலமைச்சர்

தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ வசதிகள் உள்ளன. ஏற்கனவே பத்து ஆம்புலன்ஸ்கள் இயங்கிவரும் நிலையில் இன்று 22 ஆம்புலன்ஸ் சேவைகளை முதலமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்.

Intro:

Body:கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நவீன வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ள அம்மா ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அமைச்சர்கள்
கலந்து கொண்டனர்.

இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கம், படுக்கை வசதி, சிகிச்சை கருவிகள் அனைத்து வசதிகளுடன் மருத்துவக் குழுவும் இடம்பெற்றுள்ளது. கால்நடைகளுக்கு அவசர மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைக்காக இலவச தொலைபேசி எண் 1962 என்ற இலவச எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்படும் தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ வசதிகள் உள்ளன. கிராமங்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் கால்நடைகளை, கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே வந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். ஏற்கனவே பத்து ஆம்புலன்ஸ்கள் இயங்கி வரும் நிலையில் இன்று 22 ஆம்புலன்ஸ் சேவைகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.