சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கரோனோ நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு கார் மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். சேலம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22ஆக இருக்கும் நிலையில், நேற்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சேலத்தில் மேலும் கரோனோ நோய்த்தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலர்களிடம் கேட்டறிந்து, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: உணவுப் பொருள்கள் வழங்குவதற்கு தடை: வைகோ தொடுத்த வழக்கு முடித்துவைப்பு