ETV Bharat / city

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல் - எடப்பாடி பழனிசாமி

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

condolences
condolences
author img

By

Published : Sep 12, 2020, 3:12 PM IST

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 12) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பூர்ணிமா, சித்ரா, சத்யா, கலையரசி ஆகிய நான்கு பேர் ஏரியில் துணி துவைக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம், தெரணி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கிணறு வெட்டும் போது மண் சரிந்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுபோல் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வால் மதுரை மாணவி தற்கொலை; துணை முதலமைச்சர் இர‌ங்க‌ல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.