ETV Bharat / city

‘அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை மூடினால் சொத்துகளை அரசிடமே ஒப்படைக்க வேண்டும்’ - கல்வி முகவாண்மை

சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதியுதவி பெறும் பள்ளிகளை மூடினால் அனைத்துச் சொத்துகளையும் அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

TN secretariat
author img

By

Published : Sep 22, 2019, 5:53 PM IST

2018ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தில், அரசிடமிருந்து மானியம் பெற்றோ அல்லது பெறாமலோ நிறுவப்பட்ட, நிர்வகிக்கப்படும் அல்லது பராமரிக்கப்படும் விளையாட்டுப் பள்ளி, மழலையர் பள்ளி, ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை தனியார் பள்ளிகள் என கூறப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஒன்றினை நிறுவுவதற்கும் அனுமதியைப் பெறுவதற்கும் அரசிடம் விண்ணப்பித்து, அதற்குரிய ஆவணங்களுடன் இருத்தல் வேண்டும். இந்த விண்ணப்பங்களை பெற்றதில் இருந்து ஆவணங்களை சரிபார்த்த பின்பு மானியம் பெறுவதற்கான அனுமதியை விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள், விண்ணப்பதாரருக்கு அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும்.

கல்வி முகவாண்மை ஒவ்வொன்றும் 6ஆம் பிரிவின் படி அனுமதிக்கான ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் காலமொன்றிற்குள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை பரிசீலனை செய்து அனுமதியை வழங்கும் முன்னர் அதற்குரிய அலுவலர், வட்டாரத்தில் அதற்கு முன்பு உள்ள பள்ளிகளின் போதிய எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கல்வி முகவாண்மை எதுவும் 8ஆம் பிரிவின்படி தகுதிறமுடைய அதிகார அமைப்பிடமிருந்து ஏற்பளிப்பிற்கான சான்றிதழைப் பெறாமல் மாநில பள்ளிக்கல்வி வாரியத்திற்கு அல்லது பிற எந்த வாரியத்திற்கும் இணைப்பிற்காக விண்ணப்பிக்கக்கூடாது.

ஒரு பள்ளியை மூடினால், முடிந்தவரை அரசு நிதி உதவி பெறும் பள்ளி, அரசால் நிதியுதவியளிக்கப்பட்ட அல்லது அனைத்து அசையும், அசையாச் சொத்துகளுடைய நிலம் கட்டிடங்கள், பிற எந்தப் பொருளாக இருந்தாலும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:
நிதியுதவி பெறும் பள்ளியை மூடினால்
சொத்துகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்Body:

நிதியுதவி பெறும் பள்ளியை மூடினால்
சொத்துகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்
சென்னை,

தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதியுதவி பெறும் பள்ளியை மூடினால் அனைத்துச் சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தில், தகுதிறமுடைய அதிகார அமைப்பால் ஏற்பளிக்கப்பட்ட மற்றும் கல்வி முகவாண்மை ஒன்றினால் அரசிடமிருந்து மானியம் பெற்றோ அல்லது பெறாமலோ நிறுவப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் அல்லது பராமரிக்கப்படும் விளையாட்டுப் பள்ளி,மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அல்லது ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை தனியார் பள்ளிகள் என கூறப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஒன்றினை நிறுவுவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு தகுதிறமுடைய
அதிகார அமைப்பிற்கு ஒவ்வொரு விண்ணப்பமும் அற்குரிய படிவத்தில் , கட்டணங்களுடன் சேர்த்து மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் இருத்தல் வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை பெற்றதில் இருந்து ஆவணங்களை சரிபார்த்த பின்பு மானியம்
பெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு அல்லது மறுப்பதற்கான முடிவை எடுக்கும். விண்ணப்பம்
பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலங்களுக்குள் மற்றும் விண்ணப்பதாரருக்கு அதற்கான
காரணங்களை தெரிவிக்கும் வகையில் அதனுடைய முடிவைத் தெரிவிக்க வேண்டும்.

கல்வி முகவாண்மை ஒவ்வொன்றும் 6 ஆம் பிரிவின் படி அனுமதிக்கான ஆணை
பெற்றப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் காலமொன்றிற்குள் அங்கீகாரத்திற்கு
விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து அனுமதியை வழங்கும் முன்னர் அதற்குரிய அதிகாரி, வட்டாரத்தில் இதற்கு முன்பு உள்ள பள்ளிகளின் போதிய எண்ணிக்கை, வட்டாரத்தில் தனியார் பள்ளிக்கான தேவை,
கருதப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தின் அளவு , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய வசதிகள், கற்பித்தலுக்கான கருவி, ஆய்வுக்கூடம், நூலகம் மற்றும் பிற வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

குழந்தை எதுவும் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டாமல் இருந்தாலும்,
அல்லது அங்கீகாரத்தினை புதுப்பித்தலுக்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கின்றபோது பள்ளி
எதிலும் சேர்க்கக் கூடாது.

கல்வி முகவாண்மை எதுவும் 8 ஆம் பிரிவின்படி தகுதிறமுடைய அதிகார அமைப்பிடமிருந்து
ஏற்பளிப்பிற்கான சான்றிதழைப் பெறாமல் மாநில பள்ளிக்கல்வி மாநில வாரியத்திற்கு அல்லது பிற
எந்த வாரியத்திற்கும் இணைப்பிற்காக விண்ணப்பிக்ககூடாது.

ஒரு பள்ளியை மூடினால் அந்த பள்ளியின் செயல்படுதானது அற்றுப்போகும். முடிந்தவரை அரசு நிதி உதவி பெறும் பள்ளி, அரசால் நிதியுதவியளிக்கப்பட்ட அல்லது அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களுடைய நிலம் கட்டிடங்கள் மற்றும் பிற எந்தப் பொருளாக இருந்தாலும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.