ETV Bharat / city

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் தீவிர தூய்மைப்பணி - etvbharat

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாள்கள் தேங்கக்கூடிய திடக்கழிவுகளை அகற்ற நாளைமுதல் (ஜூலை 19) சனிக்கிழமைவரை (ஜூலை 24) ஒரு வாரகாலத்திற்கு தீவிர தூய்மை பணி நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சியை தூய்மைப்படுத்தும் பணி நாளைமுதல் தொடக்கம்

author img

By

Published : Jul 18, 2021, 9:34 AM IST

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் பயன்படுகிறது. மக்காத குப்பைகள் மறு உபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மே மாதத்தில்

தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் மாநகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணி தொடர்ந்து 10 நாள்கள் மேற்கொள்ளப்பட்டு,

  • நீண்ட நாள்களாக தேங்கியிருந்த குப்பைகள் 3,260 மெட்ரிக் டன்,
  • கட்டிடக் கழிவுகள் 10,085 மெட்ரிக் டன்
  • மொத்தக் கழிவுகள் 13,345 மெட்ரிக் டன் அகற்றப்பட்டு அவ்விடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ளன.

2,000 மெட்ரிக் டன் குப்பைகள்

மாநகராட்சி பகுதிகளில் நீண்ட நாள்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள், கட்டிடக் கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் ஒரு வார காலத்திற்கு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு

  • குப்பைகள் 2,000 மெட்ரிக் டன்
  • கட்டிடக் கழிவுகள் 6,700 மெட்ரிக் டன்
  • மொத்தக் கழிவுகள் 8,700 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன.

தண்டையார் பேட்டை

ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப்பணியில் தண்டையார் பேட்டை மண்டலத்தில், சிறப்பான வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்புகள், நீர்வரத்து கால்வாய் குறிப்பாக குடிசைமாற்று வாரிய கரையோரங்கள், ரயில்வே தண்டவாளத்தையொட்டிய பகுதிகள் போன்ற இடங்களில் நீண்ட நாள்களாக தேங்கி கிடந்த குப்பைகள், கட்டிடக் கழிவுகளை கண்டறிந்து

  • 113 மெட்ரிக் டன் குப்பைகள்
  • 519 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இலக்கு நிர்ணயம்

இந்த மண்டலத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப்பணிக்காக மண்டல அலுவலர் உள்ளிட்டோரை பாராட்டி பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி சான்றிதழ் வழங்கினார்.

நாளைமுதல் (ஜூலை 19) சனிக்கிழமைவரை (ஜூலை 23) மாநகராட்சி சார்பில், தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு, 320 இடங்களில் சுமார் 1,300 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 2,500 மெட்ரிக்டன் கட்டிடக் கழிவுகள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகர் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், பாலங்கள், சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. இதுநாள்வரை 5,688 இடங்களில் 52,043 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

பொது இடங்களை தூய்மைப்படுத்தி மாநகரின் அழகை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில், சிறப்பு நடவடிக்கையாக ஜூலை 24ஆம் தேதியன்று தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலைப்பணியாளர்களை கொண்டு சுவரொட்டிகள் அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: '5 நாள்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் இலவசப் பயணம் - ராஜகண்ணப்பன்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.