சென்னை விமான நிலையத்தில் சுமார் நான்கரை ஆண்டுகளாக யு.டி.எஸ். என்ற தனியார் ஒப்பந்தத்தில் சுமார் 288 பேர் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்துவந்தனர்.
நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களே ஆன நிலையில் யு.டி.எஸ். ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென நேற்று முன்தினம் இரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யு.டி.எஸ். ஒப்பந்தத்தில் பணிபுரிந்துவந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மாற்று ஒப்பந்தத்தில் பணிபுரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தனியார் யு.டி.எஸ். ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு செட்டில்மென்ட் பணத்தை தர அந்நிறுவனம் மறுத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலைய பகுதியில் திரண்டு ஐந்தாண்டுகள் யு.டி.எஸ். தனியார் ஒப்பந்த நிறுவனம் செயல்படும் எனக் கூறி தற்போது நான்கரை ஆண்டுகளில் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் யு.டி.எஸ். ஒப்பந்தத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் செட்டில்மென்ட் பணத்தைத் தர மறுக்கப்பட்டுள்ளது. எனவே தங்களின் பணத்தை கொடுத்துவிட்டு தனியார் ஒப்பந்த நிறுவனம் செல்ல வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த சென்னை விமான நிலைய காவல் துறையினர் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்துசெல்லுமாறு தெரிவித்தனர்.
ஆனால் தங்களுக்கு ஒரு முடிவு தெரியாமல் தாங்கள் இங்கிருந்து கலைந்துசெல்ல மாட்டோம் எனக் கூறி அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
யு.டி.எஸ். தனியார் ஒப்பந்த நிறுவன அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - சென்னை விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: விமான நிலையத்தில் யு.டி.எஸ். என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.