ETV Bharat / city

அரசு நல்ல முடிவை தரும்! - திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை!

சென்னை: திரையரங்குகள் செயல்படுவது தொடர்பாக அரசின் நல்ல முடிவுக்கு காத்திருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

owners
owners
author img

By

Published : Jan 7, 2021, 6:31 PM IST

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்தது குறித்து, உள்துறை அமைச்சகம் அரசுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் கரோனா அச்சுறுத்தல் நீங்காததால் திரையரங்கங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100% இருந்து 50% ஆக குறைக்க அறிவுறுத்தியது. மேலும், அரசின் இந்நடவடிக்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி விதிமீறல் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முதல் நாளான ஜனவரி 13 அன்று, நடிகர் விஜயின் ’மாஸ்டர்’ மற்றும் நடிகர் சிலம்பரசனின் ’ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இதனால் அவர்களின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இது குறித்து பேசிய திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், ”உள்துறை அமைச்சக கடிதம் ஏமாற்றம் அளித்தாலும், தமிழக அரசு முடிவு எடுக்கும் வரை காத்திருப்போம். எனவே அரசு உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டும். அதற்கு பின் தியேட்டர் உரிமையாளர்கள் கூடி ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் 5% முன்பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளது” என்றார்.

இது பற்றி பேசிய சட்ட வல்லுநரும் மற்றும் சமூக ஆர்வலருமான இளங்கோவன், உரிய கரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், இல்லையெனில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்

இதனிடையே, திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்ததை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்ட நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடரப்பட்ட மற்றொரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நாளை விசாரிக்கிறது.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்புக்கு பெரும்பாலான பெற்றோர் விருப்பம் - பள்ளிக் கல்வித்துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.